இலங்கையில் இனவாத வன்முறைகள்: ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து பரவலாக முன்னெடுக்கப்படும் இனவாத வன்முறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், சமீப நாட்களில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் இனவாத வன்முறைகளை ஒடுக்க, தொடர்புடைய நபர்களை கைது செய்யப்படுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் சட்டத்தை நிலைநாட்ட இலங்கை அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும், சட்டம் அனைவரும் சமமாக இருத்தல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் செயல்பட்டுவரும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, ஐக்கிய இராச்சிய உயர் ஆணையம், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதரகங்களின் ஒப்புதலுடன் குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் பல சமீப ஆண்டுகளாக பயங்கவராத தாக்குதல்களையும் வெறுப்புணர்வு குற்றங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

மேலும், தெளிவான தலைமையால் மட்டுமே வெறுப்புணர்வு மற்றும் இனவாத வன்முறைகளை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியும்.

தற்போதைய சூழலில் இலங்கை மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் பாராட்டுவதாக கூறும் ஐரோப்பிய ஒன்றியம்,

நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

அரசியல், மதங்களில் தலைவர்கள் மற்றும் சமூக தலைமகள் ஒன்றிணைந்து இனவாத மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் தர முன்வர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஊடகங்கள் தங்கள் கடைமையை செய்ய வேண்டும் எனவும், பொல்லியான தகவல்களை இனம் கண்டு அவைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்