இலங்கை குண்டுவெடிப்பில் உறவினர்கள் இறந்ததை உணராத சிறுவன்.. அவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என நம்பும் பரிதாபம்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் இழப்பின் வலியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்.

இதில் பல சிறார்களும் இறந்தனர், குண்டுவெடிப்பில் 11 மாத கை குழந்தை இறந்தது. உயிரிழந்தவர்களில் இளம் வயது என்றால் இந்த குழந்தை தான்.

இந்த சம்பவத்தில் பெவன் (9) மற்றும் கிளவன் (6) ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இருவரின் இழப்பில் இருந்து மீள முடியாமல் அவர்களின் உறவுக்கார சிறுவன் ஜோஸ்வா (8) தவித்து வருகிறான்.

ஜோஸ்வா கூறுகையில், எனக்கு பெவன் மற்றும் கிளவனை அதிகம் பிடிக்கும்.

அவர்கள் விரைவில் மீண்டும் வருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், பின்னர் நாங்கள் சைக்கிள் ஓட்டுவோம் மற்றும் தெருவில் விளையாடுவோம் எனவும் கூறியுள்ளான்.

இந்த தாக்குதலில் சமையல்காரர், கூடைப்பந்து வீரர், ஆட்டோ ஓட்டுனர் என பலதரப்பட்ட மக்களும் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்.

சம்பவத்தன்று பிரியந்தா ஜெயகொடி என்பவர் காலில் காயம் பட்டதால் அவர் செபஸ்டின் தேவாலய பிரார்த்தனைக்கு செல்லவில்லை.

ஆனால் அவரின் மனைவி கிரித்திகா மற்றும் 17 வயது மகன் தேவாலயத்துக்கு சென்ற நிலையில் அங்கு குண்டு வெடித்தது.

இதில் கிருத்திகா இறந்துவிட்ட நிலையில் ஐசியூவில் அவர் மகனுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயகொடி கூறுகையில், என் மனைவி இழப்பை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை, அவர் எப்போதும் உபயோகப்படுத்தும் தையல் மிஷின் தற்போது தனியாக உள்ளது.

என்னையும் என் மகனையும் கிரித்திகா மிகவும் நன்றாக கவனித்து கொள்வாள், என் வாழ்க்கை ஒரு நொடியில் மாறிவிட்டது என கண்ணீருடன் கூறியுள்ளார்.

இப்படி பலரும் தங்களின் உறவுகளை இழந்துள்ள நிலையில் அந்த வலி அவர்கள் மனதில் தங்கியிருப்பதை காண முடிகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்