எங்கள் வாழ்க்கையை விட அவர்கள் உயிர் தான் முக்கியம்... பலரின் உயிரை காப்பாற்றிய இலங்கை தம்பதி... நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் கடந்த 13ஆம் திகதி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் சில குடும்பங்களை ஒரு தம்பதி பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து கடந்த 13ஆம் திகதி இலங்கையின் சில பகுதிகளில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள், நிறுவனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் Nattandiya நகரில் உள்ள இஸ்லாமியர்கள் வீடுகள் சூறையாடப்பட்டது.

இதில் சில இஸ்லாமிய குடும்பங்களை தாக்குதலில் இருந்து சிங்கள தம்பதியான சுஜிவம்வி சந்திமா மற்றும் குமரா காப்பாற்றியுள்ளனர்.

சுஜிவன்வி வீட்டில் தற்போது இருக்கும் இஸ்லாமியரான ஹலிமி கூறுகையில், எங்கள் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்த வந்தார்கள்.

அப்போது சுஜிவன்வி தான் இது சிங்களவரின் வீடு என கத்தினார், இதனால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

சம்பவத்துக்கு பின்னர் சுஜிவன்வியும் அவர் கணவர் குமராவும் தான் எங்களுக்கு உணவு கொடுத்தனர், நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

இது குறித்து சுஜிவன்வி கூறுகையில், ஹலிமா உட்பட 4 பேர் கொண்ட அவர் குடும்பத்தையும், இன்னொரு இஸ்லாமிய குடும்பத்தையும் தாக்க சிலர் முயன்றார்கள்.

அப்போது அவர்களை காப்பாற்ற நினைத்தோம், ஆனால் அது எங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என உணர்ந்திருந்தோம்.

ஆனால் அப்போது எங்கள் வாழ்க்கையை விட அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது என கூறினார்.

அதே போல முகமது ரிஸ்வி மற்றும் அவர் குடும்பத்தார் 14 பேரை ஒரு அறையில் சுஜிவம்வி மற்றும் குமாரா ஆகியோர் மறைத்து வைத்தனர்.

இதன் மூலம் அவர்கள் வீட்டருகில் வந்த கும்பல் அந்த வீட்டில் சிங்களர்கள் இருப்பதாக நினைத்து அதை தீவைத்து எரிக்க வில்லை.

அவர்களுக்கும் தங்களை காப்பாற்றிய தம்பதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்