இலங்கையின் முக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் காணப்படும் முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தாக்குதல்களை முன்னெடுத்தவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், இந்த சைபர் தாக்குதலானது தகவல் திருட்டு அல்ல எனவும் இது வெறும் அச்சுறுத்தல் நடவடிக்கை எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக குவைத் தூதரகம், தேயிலை ஆராய்ச்சி நிலையம், இலங்கை சட்டத்தரணிகள் இணையத்தளம், ரஜரதா பல்கலைக்கழகம் உட்படப் பல இணையத்தளங்கள் மீது குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டாலும் தற்போது அவை சீர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு பாதிப்புக்கு உள்ளான மேலும் சில இணையத்தளங்களை இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளிலும் இலங்கை மீது சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers