இலங்கையின் ஷங்கிரி-லா ஹொட்டலில் தாக்குதல் நடத்தியவர் இவர் தான்: டி.என்.ஏ பரிசோதனை முடிவு வெளியீடு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையின் ஷங்கிரிலா ஹொட்டலில் தாக்குதல் நடத்தியவர் தீவிரவாதி முகமது ஜகரான் தான் என்றும் அந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் உறுதியாகியுள்ளது.

ஜகரானின் இரத்த மாதிரிகள் டி.எம்.ஏ பரிசோதனைக்கு அனுப்பட்ட சூழலில் அதன் முடிவுகள் தற்போது வந்துள்ள நிலையிலேயே இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

இது தொடர்பான செய்தியை Hiru பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21ஆம் திகதி 8 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் கொழும்பில் உள்ள ஷங்கிரி லா ஹொட்டலும் ஒன்றாகும்.

இந்த இடத்தில் இரண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் ஒருவர் தேசிய தவ்ஹித் ஜமாத் இயக்கத்தின் தலைவர் முகமது ஜகரான் எனவும், அந்த தற்கொலைப்படை தாக்குதலில் அவர் இறந்துவிட்டார் எனவும் தற்போது டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் இன்று சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers