இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. மாநிலங்களவை உறுப்பினர் ஓபன் டாக்

Report Print Basu in இலங்கை

இலங்கையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, தென் இலங்கையிலிருந்து தமிழ் அரசியல் தலைவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டனர். உள்ளுர் அராசங்கத்தின் கல்வி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தொண்டமானின் மகன் ஆகியோர் ஆவர்.

சமீபத்திய தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளுர் ஷியா முஸ்லிம்களுக்கு ஈரானுடன் உள்ள செல்வாக்கே காரணம் என அவர்கள் விவரித்ததாக சுப்ரமணிய சுவாமி பதிவிட்டார்.

பலர் இதற்கு ஆதாரம் இருக்கிறதா என சுப்பரமணியன் சுவாமியிடம் கேட்க. அவர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இது தொடர்பான பதிவிட்டார். அதில், சமீபத்திய இலங்கை தாக்குதல் ஷியா பிரிவினரால் நடத்தப்பட்டது என நான் தவறாக கூறிவிட்டேன். அது உண்மையில்லை.

இந்த தாக்குதல் வசாபி சன்னி பிரிவினரால் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஈரான் உதவியுடன் ஷியா கல்வி நிறுவனங்களுக்கு நிதியளிக்கப்படுகிறது. இந்த கல்வி நிறுவனம் மூலம் மத மாற்றம் செய்யப்படுகிறது என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்