இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்.. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பில் இதுவரை 2,289 பேர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவலை காவல்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

குண்டுவெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 139 தமிழர்கள் உள்பட 2 ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தற்போது 1655 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், 423 பேர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 211 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers