இலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு

Report Print Raju Raju in இலங்கை
289Shares

இந்தியாவின் மும்பையில் இருந்து கொழும்புக்கு சென்ற மன ஆரோக்கிய மருத்துவ குழுவினர் மேற்கொண்ட செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்ததோடு, 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த eye movement desensitization என்ற உளச்சிகிச்சை குழுவை சேர்ந்த இளம் பெண்கள் சமீபத்தில் இலங்கையின் கொழும்புக்கு சென்றனர்.

அதாவது குண்டுவெடிப்பு காரணமாக பலரும் மன அழுத்தம் மற்றும் அந்த சமயத்தில் நடந்த மோசமான நினைவுகளை இன்னும் மனதில் வைத்து கொண்டு தவித்து வருகின்றனர்.

அதிலிருந்து உளவியல் ரீதியான மன ஆரோக்கிய சிகிச்சை மூலம் அவர்களை மீட்டெடுப்பது தான் இந்த குழுவினர் மேற்கொள்ளும் பணி.

இவர்கள் கொழும்பில் உள்ள 45 பாதிரியார்கள், சந்நியாசிகள் மற்றும் மருத்துவர்களுக்கு இது தொடர்பான பயிற்சியை அளிக்கிறார்கள்.

பின்னர் அவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உளவியல் ரீதியான சிகிச்சையை அளிப்பார்கள்.

இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மன வலியில் இருந்து மீள முடியும் என குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்