ராஜபக்சேவின் மகன் திருமணத்தில் மறைந்திருக்கும் முக்கிய ரகசியம்! வெளியான தகவல்

Report Print Santhan in இலங்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளன்று, இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவின் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக கட்சி தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது.

இதையடுத்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். பதவி ஏற்ற சில தினங்களிலே வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மோடி, இலங்கைக்கு குறுகிய கால பயணமாக சென்றிருந்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சேவையும் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது ராஜபக்சே மகன் நாமலும் உடன் இருந்தார். அப்போது, தமக்கு செப்டம்பர் 17-ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக மோடியிடம் நாமல் கூறினார்.

சற்றே ஆச்சர்யமடைந்த பிரதமர் மோடி, செப்டம்பர் 17-ஆம் திகதியை ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்? என நாமலிடம் கோட்டிருக்கிறார்.

அது ஒரு நல்ல நாள் என்பதால் தேர்வு செய்தோம் என்றார். பின்னர் நாமலிடம் சிரித்தபடியே, செப்டம்பர் 17-ஆம் திகதி எனது பிறந்த நாள் என மோடி கூறியிருக்கிறார்.

நாமல் ராஜபக்சே திருமணம் செய்து கொள்ள இருப்பது விளையாட்டு ஆர்வலரும் லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசனின் நிறுவனருமான திலக் வீரசிங்கவின் மகளை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers