இலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்?

Report Print Abisha in இலங்கை

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வழங்குவதற்காக பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள் இந்த வாரம் இலங்கைக்கு செல்ல உள்ளனர்.

லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் பிரதிநிதிகளும் இதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய பொறுப்பாளர் ஜேம்ஸ் டவுரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக பிரித்தானியாவில் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள இந்த நிபுணர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்த நிபுணர்கள் குழு விடயங்களை பரிமாறிக்கொள்ள உள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers