இலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை? வெளியான தகவல்

Report Print Santhan in இலங்கை

இலங்கை குண்டு வெடிப்பில் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

இலங்கை குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் சிலர் பொலிசார் தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிககமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கையின் கத்தோலிக்க தேவாலயங்களின் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித், இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.

இந்த குழந்தைகள் இயல்பு நிலையை எட்டுவதற்கான பணிகளில் தேவாலயம் கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers