இலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை! அவர்கள் செய்த குற்றம்?

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் சட்டவிரோதமாக போதை பொருள் கடத்திய கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், நிறைவேற்றும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

ஆனாலும் விரைவில் இந்த தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

43 வருடங்களின் பின்னர், இது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்