இலங்கை புத்த விழாவில் அனுபவித்த கொடுமை.. உயிருக்கு போராடும் டிக்கரி; வெளியான அதிர வைக்கும் படங்கள்

Report Print Basu in இலங்கை

இலங்கையில் நடைபெற்ற பெரஹர விழாவில் பங்கேற்ற 70 வயதான டிக்கரி என்ற பெண் யானை உயிருக்கு போராடி வருவதாக Mirror செய்தி நிறுவனம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கண்டியில் நடைபெற்று வரும் பெரஹர விழாவில், எலும்பும் தோலுமாக மிக மோசமான நிலையில் இருக்கும் டிக்கரி என்ற யானை பங்கேற்பதாக தாய்லாந்தின் யானைகளை பாதுகாக்கும் தொண்டு நிறுவன அறக்கட்டளை சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது டிக்கரிக்கு உடல்நிலை மிக மோசமான நிலையில், தரையில் படுத்து கிடந்து உயிருக்கு போராட, மக்கள் பலர் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் துன்பகரமான புதிய படம் வெளியாகியுள்ளது. இப்படம் டிக்கரியின் நலனுக்கான அச்சங்களை அதிகரித்துள்ளது, மேலும் விலங்கு நல ஆர்வலர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

(Image: Getty)

மதத்தின் பெயரால், இந்த அழகான, உணர்வுபூர்வமான, உணர்திறன் கொண்ட, வயதான பெண் யானைக்கு இத்தகைய கொடுமை ஏற்படக்கூடும் என்பது வேதனையானது என விலங்கு உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யும் 58 வயதான காம்ப்பெல் கூறியுள்ளார்.

உடனடியாக டிக்கிரியை பார்வையிட கால்நடை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க கூறியுள்ளார்.

(Image: Getty)

யானை நிலைகுலைந்தது குறித்து எனக்கு தகவல்கிடைத்தது, யானை விரைவில் குணமடையும் என்று நான் மனதார நம்புகிறேன். இச்சம்பவத்தை கருத்தில் கொண்டு, இதுபோன்ற மோசமான ஆரோக்கியத்தில் உள்ள யானை எப்படி, ஏன் பெரஹராவில் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டறியவும், பொறுப்பானவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் இந்த விஷயத்தில் விசாரணையைத் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

(Image: Getty)

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து யானைகளின் ஆரோக்கியத்தையும் ஆய்வு செய்ய கால்நடை குழுவையும் நியமித்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க கூறியுள்ளார். டிக்கிரிக்கு மருத்துவ உதவி பெறக் கோரும் மனுவில் 17,800 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்