இலங்கை அதிகள் முகாமில் இருந்த இளைஞன் செய்த செயல்... அடித்து உதைத்த மக்கள்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in இலங்கை

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த இளைஞன் குழந்தையை கடத்த முயன்றதால் அவர் அதிரடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோளிங்கர் ரயில் நிலைய வளாகத்தில், தண்டவாள பணிகளுக்காக ஆந்திராவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துா்காபிரசாத் என்பவரின் 5 மாத குழந்தை ரிஷிகவந்தாவை மர்ம நபர் ஒருவர் தூக்கி உள்ளார்.

அப்போது குழந்தை அழுததால், அவரது மனைவி எழுந்ததும் அந்த நபர் உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதைக் கண்டு அவர் கூச்சலிட்டதால், தொழிலாளர்கள் அவரை துரத்திச் சென்றுள்ளனர்.

ஆனால் புதருக்குள் பதுங்கியிருந்ததை, கண்டுபிடித்த அவர்கள் பிடித்து அடித்து கமபம் ஒன்றில் கட்டி கண்மூடித்தனமாக அடித்துள்ளனர்.

அதன் பின் இது குறித்து ரயில்வே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் வந்தவுடன் அவரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் குழந்தையை கடத்த முயன்றவர் அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்த தினேஷ் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த பொலிசார் ,காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers