இலங்கையை பெருமைபடுத்தி வீட்டீர்கள் தர்ஷன்...மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது! வாழ்த்திய நடிகைகள்

Report Print Santhan in இலங்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேற்றப்பட்ட தர்ஷன் இலங்கையை பெருமைபடுத்தி விட்டதாக பிரபல நடிகை ஆர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் 15 பிரபலங்கள் கலந்து கொள்ளும் 100 நாட்கள் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டிகளுக்கு நடுவே, வைல்ட் கார்ட் போட்டியாளராக சிலர் வருவர்.

இந்நிலையில் இன்று இந்நிகழ்ச்சி 98-வது நாளை எட்டியுள்ள நிலையில், சிறந்த போட்டியாளராக கருதப்பட்ட தர்ஷன் திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

இது பார்வையாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சிறந்த போட்டியாளர், மக்களால் விரும்பபடுபவர், பிக்பாஸ் விளையாட்டை மிகவும் அற்புதமாக விளையாடியவர் எப்படி வெளியேற முடியும் என்ற ரசிகர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான ஆர்த்தி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன்.....மக்களால் போற்றப்படுபவர்கள் #BiggBossTamil ஆல் eliminate செய்யப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று சீரியல் நடிகையான நீலமனி நீங்கள் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர், உங்களுக்கான மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்