இலங்கையில் நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்... இறந்த தாய் யானையை எழுப்ப போராடும் குட்டியின் வீடியோ

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் மர்மான முறையில் 7 யானைகள் இறந்த நிலையில், அதில் குட்டி யானை ஒன்று தன்னுடைய தாய் யானை இறந்தது தெரியாமல், அதை தன்னுடைய தும்பிக்கையால் தட்டி எழுப்ப முயற்சிக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

இலங்கையின் Sigiriya காட்டுப்பகுதிக்கு அருகே 4 யானைகள் கடந்த 28-ஆம் திகதி மர்மான முறையில் இறந்து கிடந்தன. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற அதிகார்கள் மேற்கொண்ட சோதனையில் மேலும் 3 யானைகள் என மொத்தம் 7 யானைகள் மர்மாக இறந்துகிடந்தன.

யானைகள் இப்படி மர்மான முறையில் இறந்து கிடப்பது பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் இறந்த யானைகளில் ஒரு யானை கர்ப்பிணி யானை எனவும், யானை எப்படி இறந்தது? இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பிரேத பரிசோதனையில் முடிவில் தெரியவரும் என்று அதிகார்கள் கூறியுள்ளனர்.

மேலும், யானைகள் காட்டுப்பகுதிகள் நுழைந்து அட்டூழியம் செய்வதால், யாரேனும் விஷம் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களி வைரலாகி வருகிறது.

அதில் குட்டி யானை ஒன்று இறந்த தன் தாய் யானையை தும்பிக் கையால் தட்டி எழுப்புகிறது. இறந்த யானைகளுக்கு 10 முதல் 15 வயது வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்