பிரித்தானியா வீரர்கள் இலங்கையில் மர்மமான முறையில் இறந்தது எப்படி? விசாரணையில் முக்கிய தகவல்

Report Print Santhan in இலங்கை

பிரித்தானியாவைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர்களைப் பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் தங்கியிருந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்களான Thomas Andrew Howard (25) மற்றும் Thomas Reed Baty (26) இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி தங்கள் ஹொட்டல் அறையில் கடுமையான மூச்சுத்திணறலால் தவித்ததையடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Thomas Howard

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் Howardம், செவ்வாயன்று மருத்துவமனையில் Batyயும் உயிரிழந்தனர்.

தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தும் ரக்பி விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்காக இருவரும் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்தனர்.

விளையாட்டு ஒன்றைத் தொடர்ந்து இரவு விடுதி ஒன்றிற்கு இருவரும் சென்றிருந்ததாகவும், அதிகாலை 2, 3 மணியளவில் அவர்கள் தங்கள் அறைக்கு திரும்பியதாகவும் Durham மற்றும் Darlington Coroner நீதிமன்றங்களில் தெரிவிக்கப்பட்டது.

இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில், பிரித்தானிய பொலிசார் மேலதிக ஆதாரங்களை இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகவும், பிரித்தானியா அதிகாரிகள் அறிக்கைகள், சிசிடிவி கமெரா காட்சிகள் ஆகியவற்றை கோரியிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான தொடர் விசாரணையில், இருவரும் போதை பொருள் அளவிற்கு அதிகமாக தெரியாமல் பயன்படுத்தியதால் உயிரிழந்திருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

Thomas Baty

அதில், சம்பவ தினத்தன்று நள்ளிரவில் கிளப்பிற்கு சென்ற இரண்டு பேரும் ஆட்டோ ஒன்றில் வந்துள்ளனர். அந்த ஆட்டோ ஓட்டுனர் தான் இவருக்கு brown sugar என்று கூறப்படும், போதை பொருளை கொடுத்துள்ளான்.

அதை வாங்கிக் கொண்டு வந்த இவர்கள், தாங்கள் தங்கியிருந்த Kingsbury ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அதில் இருவரும் Baty அறைக்கு சென்றுள்ளனர்.

சென்ற 40 நிமிடத்தில் இரண்டு பேரும் அறைக்கு வெளியே வந்து ஒரு மாதிரி தள்ளாடிய படி இருந்துள்ளனர், அதன் பின் காலை பார்த்தால் இரண்டு பேரும் தாங்கள் தங்கியிருந்த அறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளனர்.

இதில் Howard இறந்த நிலையில், Baty கோமா நிலையிலும் மீட்கப்பட, அதன் பின் Baty-க்கும் தொடர் சிகிச்சையளித்த போது, அடுத்த இரண்டு நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் பற்றி பிரித்தானியா அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும், அவர்கள் இது சரியான விளக்கமாக இல்லை என்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இரண்டு விளையாட்டு வீரர்களும் தான் போதை பொருள் வேண்டும் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டதாகவும், அந்த ஆட்டோ டிரைவர் இன்னொரு டிரைவரிடம் பேசி, அதன் பின் அந்த போதை பொருளை 15,000 ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இதில் போதை பொருள் வீரர்கள் வாங்கினார்களா? அல்லது ஆட்டோ ஓட்டுனர்கள் பணத்திற்காக வேறு மாதிரி கூறி, இவர்களிடம் ஏமாற்றி கொடுத்து சென்றார்களா? என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்