சுர்ஜித்துக்காக துடித்த இலங்கை..! குழந்தையின் மரணச் செய்தி கேட்டு இடிந்து போன மக்கள்

Report Print Basu in இலங்கை

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்துக்காக இலங்கையில் இனங்கள் மற்றும் நம்பிக்கைகளை கடந்த பல குடிமக்கள் தங்கள் எண்ணங்களையும் பிரார்த்தனைகளையும் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான இலங்கையர்கள் தமிழ்நாட்டில் உள்ள நாடுகட்டுப்பட்டி பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் சுர்ஜித் வில்சனின் துயர மரணம் இலங்கையில் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சுர்ஜித்தின் மரணம் குறித்த செய்தி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வெளியானதை அடுத்து, துக்கம் மற்றும் அதிர்ச்சியான செய்திகள் இலங்கையில் சமூக ஊடக பக்கங்களை நிரப்பத் தொடங்கின.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் மும்முரமாக இருந்தாலும், கடந்த இரண்டு நாட்களில் இலங்கையில் பலருக்கு முக்கிய கவலையாக மாறினார் சுர்ஜித்.

சுர்ஜீத் எப்படியாவது காப்பாற்றப்படுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய இலங்கையர்கள் சமூக ஊடகங்களில் பிரார்த்தனைகளை வெளியிட்டனர். அவரை மீட்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் குழு திங்களன்று பிரார்த்தனை செய்தது.

சுர்ஜித்தின் இறப்பு செய்தியைத் தொடர்ந்து, பல இலங்கையர்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர் மற்றும் குடும்பத்தினருக்கு எண்ணங்களையும் பிரார்த்தனைகளையும் இரங்கலையும் தெரிவித்தனர்.

சில சமூக ஊடக பயனர்கள் விரைவாகவும் திறமையாகவும் செயலாற்ற தவறியதாக கோபத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

கிணறு தோண்டுவது என்பது மனிதர்களின் தேவையை நிவர்த்தி செய்வதாகும்; தண்ணீர் இல்லாவிட்டால் அதை மூடுவது ஒரு சமூக பொறுப்பு என பேஸ்புக் பக்கத்தில் நுவரா எலியாவின் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த எம்.வி மயில்வாகனம் திலகராஜா கூறினார்.

நாடுகட்டுப்பட்டி உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கவனத்தை ஈர்த்தது; சிறுவனுக்கு விடியல் பிறக்காத நிலையில் அது இருளில் மூழ்கியது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கேசவன் சயந்தன் கூறினார்.

சிறுவனின் புகைப்படங்களைப் போலவே, சுஜித் வில்சன் என்ற ஹேஸ்டேக் செவ்வாய்க்கிழமை வைரலாகியது.

‘அவர்களின் கனவுகள்’ மற்றும் ‘அவர்களின் உண்மைநிலை’ என்ற தலைப்புடன் சுர்ஜித் தொடர்பில் அரசியல் கார்ட்டூனிஸ்ட் நமல் அமரசிங்க உருவாக்கி கார்ட்டூனைப் பல பயனர்கள் பகிர்ந்தனர்.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/sri-lanka-mourns-sujiths-death/article29827251.ece

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்