இலங்கை பெண்களின் வயிற்றில் அதிகாரிகள் கண்ட காட்சி...விமானநிலையத்தில் சிக்கியது எப்படி? முழு பின்னணி

Report Print Santhan in இலங்கை

இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்கள் வயிற்றில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய சம்பவத்தில், சுங்க அதிகாரிகள் விதிகளை மீறியுள்ளதால், இந்த சம்பவத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இலங்கையில் இருந்து தனியார் விமானத்தில் வந்த இரண்டு பெண்கள் தங்கள் வயிற்றினுள் தங்க மாத்திரைகளை மறைத்து வைத்து கடத்தியது, அதன் பின் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியதை அடுத்து, காரில் வந்த மர்ம கும்பல் குறித்த பெண்களை காரில் கடத்தி சென்று, இனிமா கொடுத்து தங்க மாத்திரைகளை எடுத்து கடத்திய இடத்திலே விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது முழு விபரம் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்று முன் தினம் பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு சென்றுள்ளது.

அப்போது குறித்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

அதன் படி இலங்கையை சேர்ந்த பாத்திமா(46), தெரசா(32) என்ற இரண்டு பெண்கள் மீது அதிகார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது அவர்கள் வயிற்று பகுதி வழக்கத்தை விட பெரிதாக இருந்ததால், இது குறித்து அதிகார்கள் கேட்ட போது கர்ப்பமாக இருப்பதாக கூற, உடனே பெண் அதிகாரிகள் அவர்களை ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அந்த இரண்டு பேரையும், குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தங்க மாத்திரைகளை எடுக்க சுங்க அதிகாரிகள் முடிவு செய்து காரில் சென்று கொண்டிருந்தனர்.

குரோம்பேட்டை-பல்லாவரம் இடையில் தனியார் மருத்துவமனை அருகே நிற்பதற்காக கார் மெதுவாக சென்ற போது, திடீரென அவர்கள் கார் முன் வந்து நின்ற இரண்டு காரில், மர்ம நபர்கள் கையில் பயங்கர் ஆயுதங்களுடன் இறங்கி, கார் டிரைவரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் இரண்டு பேர் சுங்க அதிகாரி அம்ரூத் திரிபாதியை அடித்து உதைத்ததால், இதனால் பெண் சுங்க ஆய்வாளர் ரேணுகுமாரி பயந்து ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த பாத்திமா, திரேசாவை தங்களுடைய காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு தாம்பரம் நோக்கி சென்றுள்ளனர்.

சுங்க அதிகாரிகள் சுதாரித்து கொண்டு விரட்டி பிடிப்பதற்குள் கார் மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். இதனால் அதிகாரிகள் இது தொடர்பாகநேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டை பொலிசாருக்கு புகார் கொடுக்க, சம்பவம் நடந்த இடம் பல்லாவரம் பகுதி என்பதால் பல்லாவரம் காவல் நிலையத்துக்கு அனுப்பினர்.

பல்லாவரம் பொலிசார் புகாரை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அங்கிருந்த சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்தனர்.

ஆனால் கார் நம்பர் சரியாக பதிவாக காரணத்தினால் திணறினர். அப்போது நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5.30 மணிக்கு பெண் பயணிகள் 2 பேரையும் கடத்தல் ஆசாமிகள் கடத்திச்சென்ற இடத்தின் பக்கமே கொண்டு வந்து நிறுத்திவிட்டு சென்றுவிட்டதால், அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.

பொலிசார் அவர்களை ஏற்கனவே தேடிக் கொண்டிருந்ததால், மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது குறித்த பெண்கள், எங்களை கடத்தி சென்றது யார்? என்று தெரியாது. காரில் கண்களை கட்டி கூட்டி சென்றனர். எங்கோ ஒரு இடத்திற்கு கொண்டு சென்று எங்களுக்கு இனிமா கொடுத்து எங்கள் வயிற்றில் இருந்து ஏதோ எடுத்தனர். எங்களை ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர் என்று கூறியதால், பொலிசார் இரண்டு பெண்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று பிற்கபல் 3 மணிக்கு காவல் நிலையம் வந்து இரண்டு பெண்களையும் அழைத்து சென்று ரகசிய விசாரணை நடத்தினர்.

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் சுங்கதுறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறியுள்ளதால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

அதாவது, தங்கத்தை வயிற்றில் விழுங்கி கடத்துபவர்களை விமான நிலைய மருத்துவக் குழு உதவியுடன்தான் வெளியில் எடுக்க வேண்டும். இல்லையெனில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டைக்கோ அழைத்து சென்று எடுக்க வேண்டும்.

அப்படி, இல்லாமல் வழக்கத்துக்கு மாறாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது ஏன் என சுங்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்