இலங்கை தேர்தல் சட்ட மீறல்கள் எப்போது அறிவிக்கப்படும்? ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு

Report Print Santhan in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சட்ட மீறல்கள் குறித்து எப்போது அறிவிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் இன்று காலை நடைபெற்ற ஜனாதிபதிக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், அதை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக தபால் ஓட்டு எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுவதும் தங்கள் குழுவை சேர்ந்தவர்கள் பெற்ற தகவல்கள் அனைத்தும், வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று தேர்தலைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மரிஸா மதியாஸ் கூறியுள்ளார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் காரணமாக, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கான குழு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பிவைத்தது.

அதன் படி கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் திகதி தேர்தலைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியப் குழுவின் 9 பேர் கொழும்பை வந்தடைந்தனர். அவர்கள் தேர்தல் செயற்பாடுகள் அனைத்தும் முடிவிற்கு வரும்வரை நாட்டில் தங்கியிருப்பர்.

இலங்கையின் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் செயற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்