இலங்கை ஜனாதிபதி தேர்தல்- சஜித் பிரேமதாஸ முன்னிலை

Report Print Vijay Amburore in இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சஜித் பிரேமதாஸ முன்னிலை வகித்து வருகிறார்.

2019ம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், நள்ளிரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்திலிருந்தே கோத்தபாய ராஜபக்ச முன்னிலை வகித்து வந்த நிலையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சஜித் பிரேமதாஸ அமோக வாக்குகள் பெற்றிருந்தார்.

தபால் வாக்குகளில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலை வகித்த நிலையில், தற்போது சஜித் பிரேமதாஸ அதிகளவான வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழர் பகுதிகளில் சஜித் பிரேமதாஸ பெற்ற அபார வாக்கு முன்னிலை அவருக்கு ஒட்டுமொத்த முன்னிலையை பெற்றுத் தரத் தொடங்கியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்