கோத்தபாய ராஜபக்ச வெற்றி! அமைதியாக கொண்டாடுங்கள்- கட்சியின் முக்கிய அறிவிப்பு

Report Print Fathima Fathima in இலங்கை

இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றதாக பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நேற்று முடிந்ததுடன் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆரம்பத்தில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலை வகித்து வந்தாலும், தமிழர் பகுதிகளில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பெற்ற அபார வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்தார்.

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச டுவிட் செய்திருந்த நிலையில், அவர் வெற்றி பெற்று விட்டதாகவும், வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results