இலங்கை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் வித்தியாசமான நடைமுறைகள் பற்றி தெரியுமா?

Report Print Santhan in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் தற்போது பரபரப்பாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் வித்தியாசமான முறைகள் குறித்து தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று காலை 7 மணிக்கு இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அடுத்த சில நிமிடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள், யார் யார் எல்லாம் முன்னிலை என்பது குறித்து தகவல்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் இறுதி முடிவு இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் தேர்தல் முறையும், வாக்கு எண்ணிக்கையும் எப்படி நடைபெறும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தாலும், இவை தேர்தலுக்காக 22 மாவட்டங்களாக பகுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் இரண்டு நிர்வாக மாவட்டங்களாக இருந்தாலும், இவை இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டங்களாக உள்ளன.

அதுபோல முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகியவை மூன்று தனித்தனி நிர்வாக மாவட்டங்களாக உள்ளபோதும் இவை மூன்றும் ஒரே தேர்தல் மாவட்டமாக உள்ளன.

வாக்காளர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் இப்படி இவை பகுக்கப்பட்டன. எனவேதான் நிர்வாக மாவட்டங்களை விட தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை மூன்று குறைவாக இருக்கின்றன.

வாக்குகள் தொகுதிவாரியாக எண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுகிறவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படாது எனவும் ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை முதல் தேர்வு, 2-வது தேர்வு, 3-வது தேர்வு என்று ஒருவர் மூன்று பேருக்கு வாக்களிக்க முடியும்.

முதல் தேர்வு மட்டுமே முதலில் எண்ணி முடிக்கப்படும். அதில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர்வு பெற்றவர்கள் யார் என்பது எண்ணப்படும். தபால் வாக்குகள் மட்டும் மாவட்ட வாரியாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results