இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி... இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்த கோத்தபாய

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டு மக்களையும் வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபாயவுக்கு வாழ்த்துக்கள்.

நம் இரு நாடுகளுக்கும், குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.

இதோடு தேர்தலை வெற்றிகரமாக நடத்திய இலங்கை மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனிடையில் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து கோத்தபாய வெளியிட்டுள்ள பதிவில், வாழ்த்துக்கள் கூறிய நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் என் நன்றி.
நம் இரு நாடுகளும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன, நம் நட்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் உங்களை சந்திக்கவும் நான் எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்