கோத்தபாய ராஜபக்ச வெற்றி... மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உருக்கமுடன் வெளியிட்ட பதிவு

Report Print Santhan in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், மகிந்த ராசபக்சவின் மகன் நமல் ராஜபக்சே உருக்கமாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் நேற்று மாலை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆரம்பத்தில் இருந்தே இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் கோத்தபாய ராஜபக்ச முன்னிலை பெற்று வந்த நிலையில், அவர் வெற்றி பெற்றுவிட்டதாக பொதுஜன முன்னணி கட்சி அறிவித்தது.

இதையடுத்து கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. கோத்தபாய ராஜபக்சவும் மக்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மகிந்த ராசபக்சவின் மகன் நமல் ராஜபக்சே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பொதுஜன முன்னணி கட்சிக்கு வாக்களித்த மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி, ஒரு போதும் வீழ விட மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results