வரலாற்று வெற்றி... கோத்தபய ராஜபக்சவின் வீடு இன்று எப்படி இருக்கு தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுவிட்டதாக கட்சி அறிவித்த நிலையில், அவரின் வீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்க குவிந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பொது ஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுவிட்டதாக கட்சி அறிவித்துள்ளது.

இதையடுத்து கோத்தபய ராஜபக்சவுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், இலங்கையின் Nugegoda பகுதியில் இருக்கும் அவரின் வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

அவர்கள் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தற்போது வரை 52 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலையில், உள்ளதால் இது வரலாற்று வெற்றி என்று கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results