இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு ராஜபக்ச மகன் நாமல் வெளியிட்டுள்ள அதிமுக்கிய தகவல்

Report Print Raju Raju in இலங்கை

தமிழ்பேசும் மக்கள் எங்கள் பங்காளிகள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களில், தமிழ்பேசும் மக்களாகிய நீங்களும் உரித்துடைய பங்காளிகள் என்பதை எங்கள் கட்சியும் மற்றும் புதிய ஜனாதிபதி திரு. கோத்தபாய அவர்களும் உறுதிப்படுத்துவோம்.

சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை. புதிய ஜனாதிபதி கோத்தபாய பற்றியும், எமதுகட்சி பற்றியும் நீங்கள் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என்பதை நான் வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்