வரலாற்றில் இடம் பிடிக்கும் கோத்தபாய ராஜபக்ச! மைத்திரிபால சிறிசேனாவை பின்னுக்கு தள்ளினார்

Report Print Santhan in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அதிகபட்சமாக வாக்குகளை பெற்று வேட்பாளர் என்ற சாதனையை கோத்தபாய ராஜபக்ச பெற்றுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதால் பொது ஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச பெற்றுள்ளதால் அவர் ஜனாதிபதியாக நாளை பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது வாக்குகள் எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கோத்தபாய ராஜபக்ச தற்போது வரை 6,924,255 வாக்குகள் பெற்றுள்ளார், இதற்கு ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் வரிசையில் மைத்திரிபலா சிறிசேனா 6,217,162 வாக்குகள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

தற்போது கோத்தபாய ராஜபக்ச இவரை விட 707,093‬ வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results