இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவை அறிவித்துள்ளது இலங்கை தேர்தல் ஆணையம்.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் முடிந்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த் தேசப்பிரிய ஊடகத்தினை சந்தித்து இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தேர்வானத்தை சற்றுமுன்னர் அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது தேசப்பிரிய ஊடகத்தின் முன்னர் தேர்தல் தொடர்பாகவும், கோத்தபாய வெற்றி தொடர்பாகவும் சிங்களத்தில் பேசினார்.
இதை தொடர்ந்து அருகில் இருந்த நபர் அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பின்னர் கோத்தபாய பேசும் போது, எனது தேர்தல் அறிக்கையில் உள்ள எல்லாவற்றையும் நிறைவேற்றுவதாக இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.
எனக்கு சார்பாக வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் எனக்கு எதிராக வாக்களித்த அனைவர்க்கும் நான் ஜனாதிபதியாக செயற்படுவேன் என பேசினார்.
இது குறித்த நேரலை வீடியோ,