கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு பின் மஹிந்த ராஜபக்சேவின் முதல் பதிவு! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Report Print Santhan in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று சகோதரர் மஹிந்த ராஜபக்சே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளராக நின்ற பொது ஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் நாளை பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சவின் சகோதரர் மஹிந்த ராஜபக்சே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிமுகத்தில் உள்ள கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்துகள். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உதவிய மக்களுக்கு நன்றி. தாய் நாட்டிற்கு சேவை செய்ய இலங்கை முழுவதும் நாங்கள் மேற்கொண்ட பிரசாரம் நன்கு பலனளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers