வரலாற்று வெற்றி பெற்றுள்ளீர்கள்! கோத்தபாயவை மனதார வாழ்த்திய ஜனாதிபதி சிறிசேன

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபாய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து கோத்தபாய நாளை இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

அவருக்கு உள்நாட்டு தலைவர்கள் முதல் வெளிநாட்டு தலைவர்கள் வரை பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கோத்தபாயவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதில், வரலாற்று வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்