கோத்தபாய ராஜபக்சே வெற்றி... கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனேவின் முக்கிய பதிவு

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹெல ஜெயவர்த்தனே டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதலே வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 7-வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே நாளை பதவியேற்கவுள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மஹேல ஜெயவர்த்தனே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பொது ஜனரக முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வெற்றி பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு, இலங்கை மக்களை ஒற்றுமைபடுத்தவும், அவரது கனவு திட்டங்களை செயல்படுத்தவும் ஆற்றல் அவருக்கு கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results