ஜனாதிபதி கோத்தபாயவுக்கு காத்திருக்கும் முக்கிய சவால் என்ன தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in இலங்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு முன்பு இருக்கும் முக்கிய சவால் என்ன என்பது குறித்து வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து அவரது வீட்டின் மூன்பு ஏராளமான ஊடகங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

அங்கு நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் செய்தியாக வெளியாகி கொண்டிருக்கின்றன.

அவரது வீட்டிற்கு ஆதராவளர்கள், வருவதும் செல்வதுமாக இருக்கின்றனர். பல பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிரபலங்கள் என பலர் அவர் வீட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சிறுபான்மையினத்தை சேர்ந்த தலைவர்கள் தற்போது வரை காணவில்லை எனவும் இது தான் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கோத்தபாய ராஜபக்சவின் சவாலாக இருக்க போகிறது என்று கூறப்படுகிறது.

ஏனெனில் நடைபெற்று முடிந்த தேர்தலில் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சிறுபான்மையினர் பெருமளவில் சஜித் பிரேமதஸாவுக்கு ஆதரவாகவும், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இதனால் சிறுபான்மையினரின் மனங்களை வெல்வதே இவருக்கு இருக்கின்ற பெரும் சவாலாக இருக்கப்போகிறது. இவருடைய வெற்றி பெரும்பாலான அளவிலே இலங்கையின் தென் பகுதியில் வாழ்கின்ற பெரும்பான்மையினரிடமே இருந்திருக்கிறது.

வடக்கி-கிழக்கு சிறுபான்மையினர் மக்களின் மனதை வெல்வதே இவர் முன் இருக்கு முக்கிய சவால் என்று கூறப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results