ஜனாதிபதியாக பதவியேற்ற பின் கோத்தாபாய முதலில் எந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் தெரியுமா? வெளியான தகவல்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தாபாய ராஜபக்ச முதல் வெளிநாட்டு சுற்றுபயணமாக இந்தியாவுக்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தாபாய ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலாவதாக வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மாலைதீவு ஜனாதிபதி, பாகிஸ்தான் ஜனாதிபதியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகமும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள கோத்தாபாய மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு செல்வேன் என அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து கோத்தாபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், தன்னுடைய முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குச் செல்வார் என அறியமுடிகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers