சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்பி

Report Print Fathima Fathima in இலங்கை

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவையில்லாமல் மேடைதோறும் பேசி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டக்களப்பு எம்பி யோகேஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது.

விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்களாக எப்போதும் இருந்துள்ளார்கள்.

அப்படி இருக்கும் போது ராஜிவ்காந்தியை கொலை செய்ததாக ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால், இங்குள்ளவர்கள் பேசுகிற பேச்சால் எங்களுக்குத் தான் பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தாங்கள் தான் ராஜிவ்காந்தியை கொன்றதாக சீமான் பொய்பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்