எங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது: பிரதமர் மஹிந்தவுக்கு லண்டனில் வசிக்கும் இலங்கைச் சிறுவனின் கடிதம்

Report Print Basu in இலங்கை
165Shares

லண்டனில் வசிக்கும் இலங்கைச் சிறுவன், தனக்கு எழுதிய கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், அன்புள்ள பிரதமர், நான் லண்டனில் வசிக்கும் ஆறு வயது சிறுவன் அப்துல்லா. பிரிட்டிஷ் இலங்கையராக இருப்பதால் அற்புதமான இலங்கைக்காக என் இதயம் 100% அன்புடன் நிறைந்துள்ளது.

உங்கள் வெற்றியை நான் வாழ்த்த விரும்புகிறேன். என் அம்மா அதைப் பற்றி என்னிடம் சொன்னார்.

நான் உங்களுடன் மிக முக்கியமான ஒன்றை விவாதிக்க விரும்புகிறேன்.

தயவுசெய்து சுற்றுச்சூழலை உங்கள் மிகப்பெரிய முன்னுரிமையாக்க முடியுமா? எங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது.

இலங்கையின் அற்புதமான கடற்கரைகள் மற்றும் கடல்களைப் பாதுகாக்க அமைப்புகளை உருவாக்க முடியுமா?

அதன் மூலம் ஆமைகள் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் என்னை போல் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை கடற்கரைகளைப் பார்வையிடும். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதிக அன்புடன் அப்துல்லா அபுபைத் என எழுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று காலை எனக்கு கிடைத்த கடிதத்திற்கு 6 வயது அப்துல்லா அபுபைத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இது என்னை ஊக்குவித்து மற்றும் உற்சாகப்பட்டுத்தியுள்ளது, பழைய தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும் பொறுப்பை நினைவூட்டியது.

ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் மற்றும் உங்களுக்கு மிகச் சிறந்த வாழ்த்துக்கள் என மஹிந்த ராஜபக்ச ட்விட்டர் வயிலாக பதிலளித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்