இலங்கையில் நடக்கும் கொடூரம்...! நாமல் ராஜபக்ச வெளியிட்ட பதபதைக்க வைக்கும் காட்சி

Report Print Basu in இலங்கை
2612Shares

இலங்கையில் நபர் ஒருவர் நாயை துப்பாக்கியால் சுடும் கொடூர காட்சியை இலங்கை எம்.பி-யும், பிரதமர் மகிந்த ராஜபக்ச மகனுமான நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்து, வீடியோவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நாயை, நபர் ஒருவர் துப்பாக்கியால் தொடர்ந்து சுடுகிறார். வலி தாங்க முடியாத நாய் கதறி துடித்து கத்துகிறது.

அப்பாவி வாயில்ல விலங்குகள் மீது இத்தகைய கொடுமை மற்றும் உணர்வற்ற தன்மை காட்டப்படுவது திகிலூட்டுகிறது. இந்த குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வர தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என நாமல் கூறியுள்ளார்.

இதுகுறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ட்விட்டரில் கூறியதாவது, இலங்கையில் சமீபத்தில் விலங்குகளுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்த சம்பவங்களைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். மிக அண்மையில் நிகாவேரதியாவில் நாய்கள் கொல்லப்பட்டது.

இந்த அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்