இலங்கையின் உலகசாதனை படைக்கும் முயற்சிக்கு வந்த இரட்டை சிக்கல்

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் ஒரே இடத்தில் அதிக இரட்டையர்களுக்கான உலக சாதனை முயற்சி தோல்வியடையக்கூடும் என செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கத்தில், உலக சாதனை படைக்கும் முயற்சியாக ஆயிரக்கணக்கான இரட்டையர்கள் கூடியிருந்தனர்.

வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பொருந்தும் ஆடைகளை அணிந்து, அடையாள அட்டையுடன் வருகை தந்திருந்தனர்.

ஆனால் நேற்று நிலவிய 32 டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் காரணமாக, இரட்டையர்கள் பலரும் கணக்கிடப்படுவதற்கு முன்பே வெளியேறியதாகவும், குழு புகைப்படம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக இந்த நிகழ்வுகளுக்கு கணக்கீடு மற்றும் குழு புகைப்படம் முக்கியமானதாக தேவைப்படுகிறது.

இருந்தாலும், நிகழ்வின் இணை அமைப்பாளரான உபூலி கமகே மற்றும் அவரது இரட்டையர் சாமலி ஆகியோர், புதிய சாதனை படைத்திருப்பது தங்களுக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்படும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு புதிய உலக சாதனை படைக்கும் தேவையை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக 1999 ஆம் ஆண்டில் தைவானில் 3,961 செட் இரட்டையர்கள், 37 மும்மூர்த்திகள் மற்றும் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 செட் நால்வர்கள் தைபேயில் உள்ள சிட்டி ஹாலுக்கு வெளியே கூடியதே உலகசாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...