விமானநிலைய அதிகாரிகளிடம் மாட்டிய இலங்கையர்கள்! சிக்கிய பல லட்சம் ரூபாய் மதிப்பில்லான பொருள்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த இலங்கையர்களை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்கள் சுமார் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை மறைத்து வைத்து கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து, தங்கம், நகை, பணம் மற்றும் விலங்குகளின் கடத்தல் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் விமானத்தில் இருந்து வரும் பயணிகளிடம் கிடுப்பிடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கொழும்புவில் இருந்து, சென்னை வந்த இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, உடைமைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை கைப்பற்றப்பட்டது.

அதே போன்று, துபாயில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த மாதவன் என்பவர், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வயர்கள் போல மாற்றி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, தலை மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்