சீனாவில் உயிர் பயத்தில் சிக்கி தவிக்கும் இலங்கையர்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடி நடவடிக்கை

Report Print Basu in இலங்கை

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்தியத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில் நாட்டில் உள்ள பல நகரங்களுக்கு செல்லவும், நகரத்தை விட்டு வெளியேறவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் உள்ள இலங்கை மாணவர்கள் உட்பட நாட்டு குடிமக்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்த 48 மணிநேரத்தில் முதலாவது குழு இலங்கைக்கு வந்தடையும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்