இலங்கையில் ATM மோசடி தொடர்பாக 2 இந்தியர்கள் கைது!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் ATM மோசடி தொடர்பாக இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ATM மோசடி தொடர்பாக காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது இரு இந்தியர்களும் கொழும்பின் கிராண்ட்பாஸில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு இந்தியர்களும் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து மோசடி முறையில் பணம் எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் துணை நிறுவனம் ATM அட்டைகளைப் பயன்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஒரு பரிவர்த்தனை செய்வதற்கு முன் ATM-ல் சந்தேகத்திற்கிடமான சாதனம் எதுவும் பொறுத்தப்பட்டிருந்தால் உடனடியாக வங்கி பாதுகாப்பு அல்லது காவல்துறையை எச்சரிக்கவும்.

சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் தொப்பி, ஹெல்மெட் அல்லது கருப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு ATM அருகே நடந்து திரிந்தால் உடனடியாக வங்கி பாதுகாப்பு அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்துகொள்ள அந்தந்த வங்கியில் எஸ்எம்எஸ் எச்சரிக்கை சேவையினை பதிவு செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்