இலங்கையையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்! முதலாவது நோயாளி?

Report Print Kavitha in இலங்கை

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் முதல் கொரோனா நோயாளி தற்போது இணங்காணப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க ( 52 வயது)இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் இத்தாலி மொழி பேசக்கூடிய சுற்றுலா வழிக்காட்டியா செயற்பட்டு வந்துள்ளார்.

இவர் கடந்த 9ஆம் திகதி இவர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ரணசிங்க கடந்த 3ஆம் திகதி இலங்கை வந்த இத்தாலி சுற்றுலா பயணிகளுடன் கடந்த 3ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரை சீகிரியா, பொலநறுவை மற்றும் கண்டி பிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் அந்த பிரதேசங்களில் உள்ள பல ஹோட்டல்களில் தங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான ரணசிங்க சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் “ இத்தாலி நாட்டவர்கள் அந்தக் ஹோட்டல்களில் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக சுகாதார பரிசோதனைக்கு செல்லுமாறு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் இவர் அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்