இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், சிலர் எப்படி சுயலமாக செயல்படுகின்றனர் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருப்பதால், பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இலங்கையும் ஒன்று.
இதன் காரணமாக கடைக்கு செல்லும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் ஒரு மீற்றர் வரை தள்ளி நிற்க வேண்டும், கூட்டம் கூடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
This what needs to stop and I said selfish people.. take only what u need and think of others.. https://t.co/0vV6nj3qW5
— Mahela Jayawardena (@MahelaJay) March 25, 2020
இந்நிலையில் இணையவாசி ஒருவர் சமூகவலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில், கொழும்வில் கடை ஒன்றிற்கு உணவிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சுமார் 4 மணி நேரமாக அந்த வரிசையில் நின்றேன். அப்போது உயர் படித்த சமூகம் என்று அழைக்கப்படுபவர்கள், கடைக்குள் செல்வதை பார்த்தேன்.
உள்ளே சென்று சில மணி நேரம் கழித்து அவர்கள் வெளியே வந்த போது, அதிகமான பொருட்களை கண்டேன், இது எவ்வளவு சுயநலம், பல் பொருட்கள் அங்காடி பல மூடியிருக்கும் நிலையில் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான, மஹேல ஜெயவர்த்தனே, உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவர்களைப் பற்றியும் சிந்தியுங்கள், இதை சுயநலவாதிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.