தமிழர்களை கொன்ற இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு! ஐ.நா கடும் கண்டனம்

Report Print Santhan in இலங்கை

தமிழர்களை கொன்ற இலங்கை இராணுவ வீரருக்கு அரசு மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ள நிலையில், இது மிகவும் கண்டனத்துக்குரியது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

இலங்கையில் கடந்த 200-ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் போரின் போது, ஐந்து வயது குழந்தை உட்பட 8 தமிழர்களை கொன்றது தொடர்பாக, முன்னாள் ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே மீது வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் கடந்த 2015-ஆம் ஆண்டு, நீதிமன்றம், கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு இலங்கை அதிபா் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் மிஷெல் பாட்செலட் கூறுகையில், கடந்த 2000-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப் போரின் போது நான்கு சிறுவா்கள் உள்பட எட்டு தமிழா்களை கொன்ற இலங்கை ராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ததுடன், அவருக்கு பொதுமன்னிப்பு அளித்து இலங்கை அரசு விடுதலையும் செய்துள்ளது.

இலங்கை அதிபா் வழங்கியுள்ள மன்னிப்பு பாதிக்கப்பட்டவா்களுக்கு எதிரானது. சா்வதேச மனித உரிமை, கடமைகளை இலங்கை நிறைவேற்றத் தவறியதற்கு இது மற்றும் ஒரு எடுத்துக் காட்டு என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்