இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்!

Report Print Basu in இலங்கை

இலங்கையில் இந்த வார இறுதியில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு மாத கொரோனா வைரஸ் ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தத் தொடங்கியுள்ள போதிலும், இந்த வார இறுதியில் இலங்கை 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை மீண்டும் விதித்துள்ளது.

இலங்கையில் கொரோனாவால் மொத்தம் 9 பேர் பலியான நிலையில், 960 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. 520 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே இலங்கையில் தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டன.

இருப்பினும், சனிக்கிழமை நள்ளிரவில், வார இறுதியில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வெளிப்படையான நடவடிக்கையாக அதிகாரிகள் மீண்டும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்தனர்.

திங்கள்கிழமை காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்