இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவால் மன உருகிய இலங்கை ஜாம்பவான் வெளியிட்ட இரங்கல் செய்தி

Report Print Basu in இலங்கை

இலங்கை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவையொட்டி இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஆறுமுகம் தொண்டமான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

ஆறுமுகன் தொண்டமான் பல ஆண்டுகளாக இலங்கை அமைச்சராக திறம்படப் பணியாற்றியவர். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காகப் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட தமிழகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மரியாதைக்குரிய ஆறுமுகம் தொண்டமனின் அகால மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கல். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என சனத் ஜெயசூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்