இலங்கை தேசிய பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை திகிலடைய வைத்த அந்த ஒரு கணம்!

Report Print Balamanuvelan in இலங்கை

இலங்கையின் தேசிய பூங்கா ஒன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் சிலர், ஒரு கணம் திகிலுடன் கூச்சலிடும் ஒரு சம்பவம் கமெராவில் சிக்கியுள்ளது.

கடந்த வியாழனன்று இலங்கையிலுள்ள Minneriya தேசிய பூங்காவில் சில சுற்றுலாப்பயணிகள் ஜீப் ஒன்றில் யானைகளை வேடிக்கை பார்த்தபடி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு யானைகள் ஜீப்பைத் துரத்தத் துவங்கியுள்லன.

வெளியாகியுள்ள வீடியோவில் பூமி அதிர யானைகள் ஜீப்பைத் துரத்துவதை காணமுடிவதோடு, பின்னணியில் பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் பயத்தில் கூச்சலிடுவதையும் கேட்க முடிகிறது.

நல்லவேளையாக, ஜீப்பின் சாரதி சமயோகிதமாக அங்கிருந்து ஜீப்பை விரைந்து செலுத்தியதால் அனைவரும் பாதுகாப்பாக திரும்பமுடிந்தது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்