இலங்கையில் 15 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூரன் சிக்கினான்! அக்கம் பக்கத்தினர் கூறிய காரணம்

Report Print Basu in இலங்கை

இலங்கையில் 15 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வமூனியா, மமடுவாவில் 15 நாய்களுக்கு விஷம் கொடுத்து இறந்த சம்பவம் குறித்த ஆரம்ப விசாரணையில், மமடுவாவில் வசிப்பவர் விஷம் கொடுத்த பிரதான சந்தேகநபர் என்பது தெரியவந்தது.

கால்நடை விவசாயியான சந்தேக நபர், தனது மாடுகளில் ஒன்றையும் அதன் கன்றையும் நாய்கள் கடித்தது என தெரிந்ததும் இந்த மனிதாபிமானமற்ற கொடூரமான செயலைச் செய்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்பும் இதே பாணியில் இதுபோன்ற செயல்களைச் செய்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் 42 வயதான முன்னாள் ராணுவ வீரர் என்றும். அவர் அடுத்த நீதிமன்ற திகதியில் வவுனியா மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார் என உள்ளூர் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்