மொத்தம் 1,100 பேர்களுக்கு கொரோனா பரப்பினேனா? முதன் முறையாக தெளிவுபடுத்திய இலங்கையர்

Report Print Arbin Arbin in இலங்கை
526Shares

இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்றை பரப்பியதாக பல மாதங்கள் பொது விமர்சனங்களுக்கு இலக்கான நபர் முதன் முறையாக மெளனம் கலைந்துள்ளார்.

33 வயதான பிரசாத் தினேஷ் என்பவர் தாம் இலங்கை அரசாங்கத்தால் பலிகடாவாக ஆக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் ஊடாகவே நாட்டில் பரவலாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட காரணம் என்றும் கூறப்பட்டது.

நோயாளி இலக்கம் 206 என மட்டுமே அரசாங்க அதிகாரிகளால் குறிப்பிடப்பட்ட பிரசாத் தினேஷ், 900 கடற்படை மாலுமிகள் உட்பட 1,100 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட காரணம் என செய்தி ஊடகங்கள், சமூக வலைதள பக்கங்கள் என அனைத்திலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறிய தினேஷ், கடற்படை மாலுமிகள் உட்பட பலருக்கு கொரோனா ஏற்பட நான் பொறுப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பில் ஏப்ரல் 5 ம் திகதி தினேஷை கிராமவாசிகள் பிடித்து பொலிசில் ஒப்படைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், ஹெராயின் வாங்குவதற்காக தேங்காய்களை திருட தினேஷும் சிலரும் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார்கள் என்ற குற்றச்சாட்டை தினேஷ் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

கொள்ளை சம்பவத்தினிடையே காலில் ஏற்பட்ட காயங்களுடன் காவல் நிலையத்தில் இருந்த தினேஷுக்கு காச்சல் கண்டுள்ளது.

இதனையடுத்து அவர் விரைவாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கே மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தினேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தினேஷை கைது செய்த பொலிசார், தினேஷின் நண்பர்கள் மற்றும் அவரது அக்கம்பக்கத்தினர் 100 க்கும் மேற்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, அனைவருமே இந்த முடிவுக்கு இணங்கவில்லை, மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட அந்த கடற்படையின் மலுமிகள் அனுப்பப்பட்டனர்.

இரண்டு வாரத்திற்கு பிறகு, ஏப்ரல் 22 ஆம் திகதி அந்த மாலுமிகளில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் அடுத்த நாள், 30 மாலுமிகள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக உறுதி செய்யப்பட்டனர்.

மாலுமிகள் விடுப்பில் இருந்த இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த வைரஸ் பரவியதால், இராணுவத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் துருப்புக்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி வருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இறுதியில், சுமார் 900 மாலுமிகள் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்கள், மேலும் சுமார் 50 பாதிக்கப்பட்டவர்களும் அந்த சூழலின் ஒரு பகுதியாக இருந்தனர்.

தினேஷின் கைதுக்கு பிறகு அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளால் மொத்தம் 1100 பேர்களை கொரோனா பாதிப்பு தொடர்பில் அடையாளம் கண்டனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை தினேஷ் முற்றாக மறுத்துள்ளார். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக போதைப்பொருள் பாவனையாளரான அவர்,

கொரோனா வைரஸ் பரவலின்போதும் அடிக்கடி ஹெராயின் வாங்குவதை வழக்கமாக கொண்டார்.

மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு மற்ற மூன்று பயனர்களுடன் சேர்ந்து அதிக ஹெராயின் வாங்க பணமும் திரட்டியுள்ளார்.

போதைப்பொருள் பயன்பாடு இலங்கையில் ஒரு குற்றமாகக் கருதப்படுவதால், கொரோனா பரவலுக்கு காரணமானவர் என தம்மை திட்டமிட்டு ஒரு பலிகடாவாக உருவாக்கியதாக தினேஷ் நம்புகிறார்.

தற்போது மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ள தினேஷ், போதை மருந்து பழக்கத்தை முற்றாக விட்டுவிட்டதாகவும்,

தற்போது தமது இரு பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்