கந்தசஷ்டி கவசம் சர்ச்சை; இலங்கை தமிழர்களின் மனநிலை என்ன? விளக்குகிறார் இலங்கை ஜெயராஜ்

Report Print Fathima Fathima in இலங்கை

சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் எனத்தொடங்கும் கந்தசஷ்டி கவச பாடலை கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இந்தப் பாடலின் வரிகளின் தொடர்ச்சியாக தலையின் முடி தொடங்கி கால் பாதங்கள் வரை ஒவ்வொரு உறுப்பாக விவரித்து அதனை வேல்கள் காக்க என்று வேண்டுவதாக பாடல் இருக்கும்.

இந்தப் பாடல்களில் ஒவ்வொரு உறுப்பையும் காக்க சொல்வது குறித்து கேலிசெய்தும், விமர்சனம் செய்தும் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளிவந்த காணொளி கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்த சேனலின் நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இச்சர்ச்சை தொடர்பாக இலங்கை தமிழர்களின் மனநிலை என்ன என்பது குறித்து பேட்டியளித்துள்ளார் இலங்கை ஜெயராஜ்.

அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் இலங்கையையும் பாதிக்கும் என்பது காலங்காலமாக நடக்கும் ஒன்று தான், ஆனால் இறை நம்பிக்கையில் அவ்வாறு இல்லை.

பாரம்பரியமாக கடவுள் நம்பிக்கை கொண்ட இலங்கை இந்து மக்கள் அதில் அசையாத நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், இன்றும் அப்படித்தான் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை கந்தசஷ்டி கவசம் பிரச்சனை புதினம் அல்ல, காலங்காலமாக சிறு கூட்டத்தினரால் செய்யப்படுகின்ற பிரச்சனை தான்.

ஆனால் தற்போது சற்று அதிகமாக இருக்கிறது, இவர்களால் இந்து மதத்துக்கோ, இந்து மக்களுக்கோ, முருக வழிபாட்டுக்கோ சிறு தீங்கேனும் வராது என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்